மளிகைக் சாமான் வாங்க செல்கையில் நடந்தவை பற்றி சில எழுத்துக்கள்

கடந்த சனிக்கிழமை சாயங்காலம் ஏழரை மணியளவில் அல்வல் ஹால்ட் இரயில் நிலையம் வந்து சாதாரனக்கட்டனம் உடைய இரயிலில் ஏரி மல்காஜ்கிரி இரயில் நிலையம் வந்தடைந்து,பைலட் ராஜ்குமார் சாலையில் அமைந்துள்ள டி-மார்ட் ரெடி கடையில்,டி-மார்ட் ரெடி app மூலம்,செல்பேசியில் பணம் செலுத்திய பொருட்களை வாங்கிக்கொண்டு இரயில் நிலையம் வந்தடைந்து அறிவிப்பின் படி நடைமேடை மூன்றில் வந்து கொண்டிருந்த மேட்சல் இரயில் நிலையம் செல்லும் இரயிலில் ஏரியமர்ந்து கொண்டேன்-இரவு ஒன்பது மணியளவில்.பைலட் ராஜ்குமார் சாலையில் உள்ள ஐயங்கார் பேக்கரியில் "dry fruit லட்டு"மற்றும் "one station one product" திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட, கடையில் (மல்காஜ்கிரி இரயில் நிலையத்தில்) உருளைக்கிழங்கு வருவலும், சிறிய வேர்கடலை பர்ஃபியும் தான் உண்டேன்.வழியில் மழையும் வலுவாகப் பெய்தது.கும்மிருட்டு வேரு.ஒரு மணி நேரம் ஆகிவிட்டது, எந்த இரயில் நிலையம் வந்திருக்கிறது என பார்த்தேன்,நடைமேடை மஞ்சல் பலகையில் "Bi Bi nagar" என எழுதியிருந்தது.உடனே தோன்றியது, "மல்காஜ்கிரி -மேட்சல் தடத்தில் இந்த இரயில் நிலையம் கிடையாதே"என்ற எண்ணம் தான்.அருகில் இருப்பவரிடம் கேட்டேன், இஃது மிரியாலகுடா இரயில் நிலையம் செல்லும் வண்டி என்று சொன்னார்.உடனே இரங்கி விட்டேன்.இரவு பத்தரை இருக்கும்.பி பி நகர் இரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் இடத்தில்,அடுத்த நாள் காலையில் தான் நாலரை மணியளவில் நாராயனாத்ரி விரைவு வண்டி நிற்க்கும் எனத் தெரிந்து கொண்டேன்.அடுத்த வழி ,அருகில் பிரதான் சாலையில் விரைவு பேருந்து மூலம் செகந்திராபாத் வந்து விடலாம் என்ற யோசனை.இரயில் நிலையத்தில் இருந்து நடக்க ஆரம்பித்தேன்.வழியில் இரு நாய்கள் குரைக்க ஆரம்பித்து விட்டன.இரு கரங்களில் மளிகைச் சாமான் மற்றும் தோளில் மற்றும் ஒரு பை.நல்ல வேளை என்னை துரத்தாமல் விட்டன. பி பி நகர் பேருந்து நிறுத்தம் வந்து நாற்பது நிமிடங்கள் கழித்து யதாகிரி குட்டாவிலிறுந்து ஹைதராபாத்தில் உள்ள மகாத்மா காந்தி பேருந்து நிலையம் (mgbs)செல்லும் வண்டியில் ஏரி(ரூ-50/-கட்டணம்)சுமார் நள்ளிரவு பண்ணிரண்டு மணி பதினைந்து நிமிடங்கள் வாக்கில் சிகந்தராபாத் இரயில் நிலையத்தினருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்து விட்டேன்.229 பேருந்து ஒன்று வந்தது,இருந்து பயணிகள் ஏரியமர்ந்து விட்டோம், ஆனால் பயணச்சீட்டு வழங்குபவர், தலைகளை எண்ணிவிட்டு, பேருந்தில் கூட்டம் சேரவில்லை,செலவுக்கு கட்டுபிடியாகாது,கீழிறங்குங்கள் எனக்கூரிவிட்டார்.இரவு நேரப்பேருந்து வரக்கூடும் எனவும் சொனனார்.ஆனால் எந்த பேருந்தும் வரவில்லை. ஞாயிறு காலை நாலேகால் மணிக்கு முதல் வண்டியில் தான் மேட்சல் வந்து சேர்ந்தேன் . இரவு உணவுக்காக நாலு இட்லி மற்றும் சட்டினி உண்டு கொண்டேன்.நள்ளிரவு பண்ணிரண்டு மணியிலிருந்து காலை இரண்டரை மணிவரை பல ஆட்டோ ஓட்டுனர்கள் வந்து எங்கு செல்லவேண்டும் என திருப்பி திருப்பி கேட்டுக்கொண்டே இருந்தனர்.அப்போதுதான் தர்பாங்கா இரயில நிலையத்தில் இருந்து வந்திருந்த காரணத்தால் பல பயணிகள் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து கொண்டு இருந்தனர்.இதற்கிடையில் rapido app மூலம் பணம் செலுத்துங்கள் எனக் கேட்டுக்கொண்டார்,இருபத்தி நான்கு மணிவரை செல்லுபடியாகும் பயணச்சீட்டு என்னிடம் இருந்ததால் நான் வேண்டாமென்று கூறிவிட்டேன்.இதற்கிடையில் போகும் போக்கில் பயணிகளை ஏற்றிச் சென்றுவிடலாம் என்று நினைக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் அதே இடத்தில் இயங்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்குமிடையில்  வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.இனிமேல் வண்டி ஏதும் வராது எனத் தெரிந்ததால் இரயில் நிலையத்தில் இருந்த குளிரூட்டப்பட்ட அறையில் ஒரு மணி நேரம் இருந்தேன்(ரூ-25).ஆக மொத்தம் மூன்று மணிநேரம் சாலையோரம் காத்திருந்தேன் சனிக்கிழமை இரவில்,ஏனென்றால் எலிகள் வேரு இங்குமங்கும் சென்று கொண்டிருந்தன.மளிகைச்சாமான்கள் உள்ள கைப்பியள்ள பைகளை தரையில் இரக்கி வைத்தால் அவற்றை எலி உண்டு விடக்கூடும் என்ற எண்ணமே.

Comments